"மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்து, அவர்களை வலுப்படுத்துவது ஜெய்க்குக் கிடைத்த வரப்பிரசாதம். இந்தப் புத்தகம் அன்பைப் பற்றிய புரிதலையும் மதிப்பையும் வளர்ப்பது மற்றுமல்லாமல் நம்மை பற்றிய விழிப்புணற்சியை அதிகரித்து நம்மைச் சுற்றி இருப்பவரின் தேவைகளை புரிய வைக்கிறது."
-தீபிகா பாடுகோன்
'திங்க் லைக் அ மங்க்' என்ற உலக பிரசித்தி பெற்ற புத்தகத்தின் எழுத்தாளர் காதலின் ஒவ்வொரு கட்டத்தின் நுணுக்கத்தையும், புராதன ஞானம் மற்றும் நவீன விஞாஞனத்திலிருந்து புரிதலை இணைத்து, வெளிப்படுத்தும் வழிகாட்டியாக இந்தப் புத்தகத்தை நமக்கு வழங்குகிறார்.
நம்மை உட்கார வைத்து நமக்கு யாரும் அன்பைப் பற்றி கற்றுக்கொடுப்பதில்லை. அதனால் நாம் காதல் கதைகளில் பார்த்ததையும் படித்ததையும் வைத்து, அறகுறை புரிதலுடன் நம் உறவுகளை அணுகுகிறோம்.இன்று வரை.
காதலை ஒரு மிகத் தூய்மையான அல்லது அர்த்தமற்ற பொதுவான ஓர் கருத்தாக வழங்காமல், குறிப்பான, செயல்முறை படுத்தக்கூடியதான வழிமுறைகளை ஜெய் ஷெட்டி நமக்கு எடுத்துக்காட்டி அன்பிற்கு தேவையான திறமைகளை பயிற்சி செய்து, பராமரித்து, அதை முன்பை விட சிறப்பாக அனுபவிக்கக் கற்றுக்கொடுக்கிறார். அன்பில் எப்படி இணைந்து ஜெயிப்பது, தோற்பது. அதை எப்படி வரையறுப்பது. ஏன் உறவை முறிக்கும்போது நாம் முறிந்துவிடக் கூடாது போன்ற நுண்ணறிவை அவர் பகிர்ந்துகொள்கிறார். முதல் சந்திப்பில் இருந்து, இணைந்து இருந்து, உறவு முறிந்து, மீண்டும் ஆரம்பிக்கும் உறவின் வட்டத்தை, வேதங்கள் மற்றும் விஞாளுத்தின் அறிவின் அடிப்படையில் அவர் அணுகுகிறார். பொய்யான உறுதிமொழிகளுக்கும், நிறைவு அளிக்காத துணைவரிடமும் ஏமாறாமல் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர் காண்பிக்கிறார்.
ஜெய் ஷெட்டியின் 8 விதிகள் படி வாழ்ந்தால் நாம் நம்மை, நம் துணைவரை, மற்றும் இந்த உலகை எதிர்பாராத அளவுக்குக் காதலிக்க முடியும்.
"உங்கள் வாழ்க்கையில் ஸ்திரமான அஸ்திவாரத்தை அமைத்து, மற்றவர்களுடன் உறவை உறுதிப் படுத்தி, பிறகு உலகுடன் உங்கள் உறவை வலுப்படுத்தும் முயற்சியில் படிப்படியாக என்ன செய்ய வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக 'அன்பின் 8 விதிகள்' அமைகிறது."
-ஜெனிஃபர் லோபெஃஜ்
"அன்பில் உயர்ந்து, இன்பம் மற்றும் நிறைவைப் பெற இது ஒரு சிறந்த வழிகாட்டி."
-தீபக் சோப்ரா
Be the first to rate this book.