பொருளாதாரத்தில் நலிவுற்று வாழ்க்கையில் போராடும் மனிதர்களுக்குப் பற்றுகோடாக அன்பு கிடைத்துவிட்டால் பெரும்பேறு. ஆனால், அதிலும் நலிவென்றால் என்னதான் செய்வது? தனக்குக் கிடைக்காமல் போன அன்புக்காக ஏங்கியும். கிடைத்த அன்பை வளர்த்த, ’பாவத்துக்காக'க் கோட்டைவிட்டும் வாழமுடியாமல் போகும் தங்கப்பனின் மன ஓட்டத்தை அத்தனை நேர்மையாகப் படைத்திருக்கிறார் ஹெப்சிபா. இருத்தலியல் நாவல் என்பதிலும், ஆணின் மன ஓட்டத்தை அப்பட்டமாக அவன் மொழியிலேயே பெண் ஒருவர் எழுதியிருப்பதிலும், இந்த நாவல் தமிழ்ப் படைப்புலகில் மிக முக்கியமான மைல்கல் எனலாம்.
Be the first to rate this book.