உண்மைச் சம்பவங்களைக் கருவாகக் கொண்ட பதினைந்து "உண்மைக் கதைகள்” இத்தொகுப்பு நூலில் உள்ளன.
இந்திய ஆக்கிரமிப்புக் காலகட்ட வாழ்க்கையையும், அந்த வாழ்க்கையின் அவலங்களையும் சோகங் களையும் சித்திரிக்கும் சிறந்த படைப்புக்களாக பதின் நான்கும்; சிறீலங்கா இராணுவக் கொடூரத்தினைச் சித்தி ரிப்பதாக ஒன்றும் அமைந்துள்ளன.
தமிழீழ-இந்தியப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதியில் வெளிவந்துகொண்டிருந்த எமது சஞ்சிகைகளில் இக்கதைகள் பிரசுரமாகியி ருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தியப் படைகளினதும் தேச விரோதக் கும்ப ல்களினதும் கெடுபிடி காரணமாக, பெரும்பாலான தமிழீழ மக்களின் கைகளை இந்தச் சஞ்சி கைகள் சென்றடையவில்லை; அதனால் ஒரு காலத்தின் பதிவாக விளங்கும் இந்த உண்மைக் கதைகளைப் படிக்கும் வாய்ப்பையும் எமது மக்கள் பெற்றிருக்கவில்லை.
Be the first to rate this book.