அமிர்தா தேவியின் கெஜ்ரி கிராமம் கெஜ்ரி (வன்னி) மரங்கள் நிறைந்த பகுதி மகாராஜா அபய்சிங்கின் படைவீரர்கள் அந்த கெஜ்ரி மரங்களை வெட்டுவதற்கு கோடாரியை ஓங்கியபோது வீட்டை விட்டு வெளியே வந்த அமிர்தா தேவி பிஷ்னோய் ஓடிச் சென்று அந்த மரத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டார் ஒரு மரத்தைக் காப்பாற்ற தன் உயிரையும் தரத் தீர்மானித்தார். ஆனால் கல்மனம் கொண்ட அந்தப் படை வீரர்கள் அவரை கோடாரியால் வெட்டி வீழ்த்திவிட்டு மரங்களை வெட்டத் தொடங்கினார்.
அங்கே ஓடி வந்த அமிர்தா தேவியின் மூன்று மகள்களும் துண்டிக்கப்பட்டு கிடந்த தங்கள் தாயைக் கண்டு துடித்தனர். ஆயினும் தாயின் வழியைப் பின்பற்றி தாங்களும் மரத்தைக் காப்பாற்ற மரங்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு காப்பாற்ற முயன்றனர். அந்தக் கொடிய வீரர்கள் மூன்று பேரையும் மரங்களைப் போல வெட்டிச் சாய்த்துவிட்டனர்.
அதுமட்டுமல்ல, சுற்றியிருந்த 49 கிராமங்களைச் சேர்ந்த 363 பிஷ்னோய் இன மக்களும் அந்த மரங்களைக் காப்பாற்றத் துணிந்தனர். அத்தனை பேரையும் வெட்டி சாய்த்து விட்டனர் அந்தக் கொலைகாரப் படை வீரர்கள்.
அன்று அவர்களின் குருதிப் பெருக்கத்தால் கெஜ்ரி கிராமத்து மண் சிவந்த பூமியாகிப்போனது.
Be the first to rate this book.