உலகின் பன்முக இனங்களையும், பலவிதமான பண்பாடுகளையும் மிக அதிக அளவில் கொண்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. பிரித்தானிய சாம்ராஜ்யத்திடமிருந்து அமெரிக்கா விடுதலை பெற்ற வரலாறு அமெரிக்கச் சுதந்திரப் போராக வர்ணிக்கப்படுகிறது. சுதந்திர அமெரிக்காவை உருவாக்கி வல்லமை பெற்றவர் ஜார்ஜ் வாஷிங்டன். அமெரிக்காவின் தந்தை என்றும் முதல் ஜனாதிபதி என்றும் அழைக்கப்பெறும் பெருமை பெற்றவர் ஜார்ஜ் வாஷிங்டன். உலகின் விழிகளை அகல விரித்து உற்று நோக்கும் வகையில் அடிமை நாடாகக் கிடந்த ஒரு பகுதியான அமெரிக்கா, தன்னை எப்படியெல்லாம் நெருப்பிலிட்டுப் புடம் போட்டு, இன்று உயர்ந்து ஒளிர்ந்து நிற்பதை நூலாசிரியர் ஜெகாதா மிக நுட்பமான ஆய்வுப் பார்வையோடு இந்நூலில் வெளிக் கொண்டுவந்துள்ளார். உலக நாடுகளில் வல்லரசாக இன்று திகழும் அமெரிக்கா தனது பூர்வீக அடிமை வாழ்வின் விலங்குகளை உடைத்தெறிந்து, வென்றெடுத்து, அனைத்து நாடுகளுக்குமான ஆளுமை மிக்க தேசமாகத் தன்னைப் பிரகடனம் செய்திருப்பதை ஆணித்தரமான வரலாற்று உண்மைகளோடு நூலாசிரியர் பதிவு செய்திருப்பது கூர்ந்து நோக்கத்தக்கது.
Be the first to rate this book.