மனிதர்கள், தங்கள் வாழ்வில் அன்றாடம் எதிர்கொள்ளும் மனக் குழப்பங்கள், மன அழுத்தம் போன்றவை இயல்பு வாழ்க்கையை திசை திருப்பி வேறு ஒரு மனநிலைக்கு கொண்டு சென்று விடுகின்றன. வாழ்க்கையில் முன்னேற்றம், பணியில் பதவி உயர்வு, பணம் சம்பாதிப்பது என எல்லாமே சீக்கிரம் நடந்துவிட வேண்டும் என்ற மனோபாவம் இன்றைய இளம் தலைமுறையினர் இடம் உள்ளது. இதனால் அவர்கள் சீக்கிரமே மன அழுத்தத்துக்கும் உள்ளாகின்றனர். இந்த நிலையில் இருந்து மீண்டு மனம் அமைதி பெற யோகா, தியானம் போன்றவற்றில் பெரும்பாலானோர் ஈடுபட்டு வருகின்றனர். மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியான வாழ்க்கை அழைத்துச் செல்லும் வழிமுறைகளில் ஒன்றாக குருமித்ரே ஷிவா, அல்கெமி எனும் வகுப்பை நடத்தி வருகிறார். அல்கெமியால் மனதிலும் வாழ்விலும் ஏற்படும் மாற்றம் என்னென்ன என்பதை விளக்கி ஆனந்த விகடனில் அவர் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். அல்கெமி பற்றி அறிந்துகொள்ளுங்கள், அமைதியான வாழ்வுக்கு வழிகாணுங்கள்!
Be the first to rate this book.