எழுத்தாளர் ஆர்.நீலாவின் பார்வை தேவதாசியரின் கலையைத் தாண்டி, தனிவாழ்விலும் நீள்கிறது. நீலா சொல்கிறார்:
“இந்நிலைக்கு அவர்களைத் தள்ளியது யார் என்ற கேள்வியை முதலில் வைக்க வேண்டும். அவர்கள் ஆற்றிய தொண்டுகள், கலை இலக்கியச் சேவைகள் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அதை நோக்கிய என் பயணமே இந்நூல்.”
அரசுகள் விரிவாகக் களப்பணி செய்து தொகுக்க வேண்டிய பணிகளை இவர் தொடங்கியிருக்கிறார். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலைப் பகுதியின் தகவல்களே இவ்வளவு என்றால், மாநிலம் முழுதும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை இந்நூல் தூண்டுகிறது. இதுவே இச்சிறு நூலின் வெற்றி. எழுத்தாளர் ஆர்.நீலாவின் தொடக்கத்தை அரசுகளும் பிறரும் தொடரவேண்டும்.
-நா. முத்துநிலவன்
Be the first to rate this book.