இந்த நூல் மதப்பரப்புரையாளர்களின் வருகையும், தமிழில் உரைநடை நூல்கள் எழுதுதலும் அச்சிடலும் பற்றிய சிறப்புகளை எடுத்துரைக்கிறது. இராபர்தோ நொபிலி உரைநடையில் எழுதிய கிறித்துவ மெய்யியல், இறையியல் நூல்கள் (1623-1642). இம்மானுவேல் மார்ட்டின் மற்றும் ழான் வேனான் பூசே எழுதிய கத்தோலிக்க கோட்பாடுகள், துறவறம். மாய-இறையியல். மற்றும் நன்னெறி நூல்கள் (1634-1731), பியர் மதுயிட் மற்றும் சார்லஸ் மைக்கேல் பெர்தோல்டி உரைநடையில் எழுதிய ஆன்மிக நூல்கள் (1703-1735), கொஸ்தான்சொ ஜோசப்பொ யுசெபியு பெஸ்சி கிறித்துவ மதம் பற்றி எழுதிய உரைநடைப் படைப்புகள் (1720 -1739). யாக்குமெ தொமாசு ரோசி எழுதிய ஆன்மிக உரைநடை நூல்கள் (1744-1751). புதுச்சேரியில் இருந்த லூயி சவினியன் துப்புய்யின் கிறித்துவ தமிழ் உரைநடைப் படைப்புகள் (1840-1872) பற்றி தெளிவாகவும் விரிவாகவும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. தரங்கம்பாடியில் இருந்த பர்த்தலோமியஸ் சீகன்பால்கும், சென்னையில் இருந்த பெஞ்சமின் சுல்ட்ஸ்சும் எழுதிய புரோட்டஸ்டண்டு கிறித்துவ உரைநடைப் படைப்புகள், தரங்கம்பாடி உபதேசியரின் புதிய உரைநடை இலக்கியப் பண்பாடும் மதப்பரப்புரையாளர்களால் ஏற்பட்ட தாக்கமும் பற்றி விவரிக்கிறது. ஐரோப்பியர்கள் எழுதிய தமிழ் உரைநடை நூல்கள், இலக்கிய வளர்ச்சி, அச்சிடப்படுதல், வாசிப்பு வரலாறு பற்றி ஆவணச் சான்றுகள் வாயிலாக புதிய பரிமாணங்களை அறிவிக்கிறது.
Be the first to rate this book.