இன்று தமிழ் நாவல் சாம்ராஜ்யத்தில் பல வித்தகர்கள் கோலோச்சி வருகிறார்கள். உருவத்தால் மறைந்துவிட்டபோதிலும், உள்ளத்தாலும் தங்கள் படைப்பாலும் இன்றும் கல்கி, சாண்டில்யன், தி.ஜா., கு. அழகிரிசாமி, ஜெயகாந்தன், லட்சுமி, வை.மு.கோதை நாயகி போன்றோர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். என் சம காலத்தில் கி.ராஜநாராயணனில் தொடங்கி ஜெய மோகன் வரை இட வலமாக ஒரு ஐம்பது பேராவது எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.ராகங்களும், வண்ணங்களும் ஏழான போதிலும், அதன் கலப்புகளில் இருந்து பல நூறு ராகங்களும் வண்ணங்களும் உருவாவது போல, இவர்களிடமிருந்து பலவித வாழ்க்கைப் பாடுகள் கதைகளாய் வந்த வண்ணமுள்ளன.இவர்களுக்குள்தான் நானுமிருக்கிறேன்.ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்யேக முகமும், உயரமும், எடையும் இருப்பது போல, எனக்கான பிரத்யேக முகம் எது என்று எண்ணிப் பார்த்தேன். ஒரு சுயபரிசோதனையை எனக்கு நானே செய்துகொண்டேன்.
Be the first to rate this book.