“ஏய், இத்தனை நல்லா பாடறே! பாட்டு வராதுன்னு ஏமாத்தத்தானே பார்த்தே?” என்று சாடினார்கள் சினேகிதிகள்.
“எனக்குத் தெரியவே தெரியாது; ராதிகா இவ்வளவு நல்லா பாடுவான்னு!” என்று சொல்லிக்கொண்டிருந்தாள் ஹிஸ்டரி லெக்சரர் விமலா. எல்லாரும் கும்பல் கும்பலாக உட்கார்ந்து சாப்பிடும்போது, ராதிகா பின்னால் இருந்ததை கல்யாணி கவனிக்காமல், மெல்லிய குரலில் சொன்னாள்.
“அவ நல்லாப் பாடறது ஒண்ணும் அதியசமில்லே. அவ அம்மா ரொம்ப நல்லாப் பாடுவா, எ கிரேட் சிங்கர்!” பிறகு குரலை வெகுவாகத் தாழ்த்தி “பாவம் அவ வாழ்க்கைதான் ரொம்ப மோசமானது!” என்ற வார்த்தைகள் ராதிகாவின் காதில் தெளிவில்லாமல் விழுந்தன.
அன்றைக்கு முழுவதும் குழம்பிவிட்டு, மறுநாளைக்கு கல்யாணியைத் தேடிக்கொண்டு போனாள். நல்லவேளையாகக் கல்யாணி ஸ்டாஃப் ரூமில் தனியாக இருந்தாள்.
“மேடம், உங்களுக்கு என் அம்மாவைத் தெரியுமா?’’ என்றாள் நேராக.
கல்யாணியின் கண்களில் ஒரு தயக்கம் புகுந்து கொண்டது தெளிவாகத் தெரிந்தது.
Be the first to rate this book.