வளாகக் கல்வியை அரசியலிலிருந்து தள்ளிவைக்க இயலாது. அரசியல் அற்ற கல்விச் செயல்பாடு அபாயகரமானது. கல்வி வளாகத்தின் ஒரு பேராசிரியர் அல்லது ஓர் ஆய்வாளர் தனது இடக்காலத்தினுடைய சமூக அரசியல் பண்பாட்டுப் பொருளாதாரப் போக்குகளை அறிந்துணராமல் இருத்தல் ஆகாது. பொதுவாகக் கல்விப்புலத்திற்குள்தான் அதிகமான முறையியல்சார் ஆய்வுகள் நடக்கின்றன. ஆய்வுகளே சமூக முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மிக முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. மனிதக் குல விடுதலைக்கு அதிகப் பங்களிப்பு செய்துவந்துள்ளவை ஆய்வுகள் தாம்.
Be the first to rate this book.