"இருப்பதிலேயே தலைசிறந்த சிந்தனையாளர்களின் கூர்மையான நுண்ணறிவுகளை உள்ளடக்கியுள்ள ஒரு அற்புதமான புத்தகம்." - ஸ்டீவன் பிரஸ்ஃபீல்டு, சிறந்த எழுத்தாளர்.
மனம் ஒரு போர்க்களம். நம்முடைய அகங்காரமே நம்முடைய மிகப்பெரிய எதிரியாக இருக்கும். நாம் சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், நம்மை நாமே முடக்கிப் போடும் உள்மன ஓசையாக அது இருக்கும். அகங்காரம் என்பது நம்முடைய ஆரம்பகால வாழ்க்கையில் உதவிகரமாக இருந்திருக்கலாம். ஆனால், நாம் வளர வளர, அது நம்மை முன்னேற விடாமல் தடுக்கும். இந்த நூல், அகங்காரத்தின் பல வடிவங்களையும், அது நம் வாழ்வில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளையும் ஆராய்கிறது. வெற்றியைத் துரத்தும்போதும், தோல்வியை எதிர்கொள்ளும்போதும், நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கும்போதும் அகங்காரம் எவ்வாறு குறுக்கிடுகிறது என்பதை இது விளக்குகிறது. நம்முடைய அகங்காரத்தை அமைதிப்படுத்தி, உண்மையான தன்னம்பிக்கையையும் பணிவையும் வளர்த்துக் கொள்வதற்கான நடைமுறை வழிகளை இந்நூல் வழங்குகிறது.
ரயன் ஹாலிடே ஓர் எழுத்தாளர், ஊடக உத்தியாளர். அவர் தன்னுடைய 19வது வயதில் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, மிகப் பிரபலமான நூலாசிரியரான ராபர்ட் கிரீனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அவர் சில காலம் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றிவிட்டு, தன்னுடைய சொந்த மார்க்கெட்டிங் நிறுவனத்தை நிறுவினார். பத்துக்கும் மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார். அவருடைய நூல்கள் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, 40 இலட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. அவர் தன் மனைவியுடனும் இரண்டு மகன்களுடனும் அமெரிக்காவிலுள்ள ஆஸ்டின் நகருக்கு வெளியே உள்ள ஒரு பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்.
Be the first to rate this book.