வந்தவாசியில் வசிக்கும் திரு. ஜனார்த்தனன் - திருமதி. கண்மணி ஆகியோரின் மகனான ஜ.சாய்ஜரன் ராகவேந்தர், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிங்ஸ்டன் மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார்.ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் வழிகாட்டுதலோடு இவர், சிறார் எழுத்தாளர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் எழுதிய 'அப்துல்கலாம் தாத்தா புத்தகம்' கதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
இந்தக் கதை குழந்தைகள் எளிமையாக வாசிக்கக் கூடிய மொழியில் இருக்கிறது, வாசியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் கதையைச் சொல்லி மகிழுங்கள்.
கன்னிக்கோவில் இராஜா ,கதைசொல்லியான இவர், சிறார் இலக்கியத்தில் அறுபது நூல்களும், பொது இலக்கியத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் படைத்தவர். கற்பனைக் கதைகள், சூழலியல் கதைகள், அறிவியல் கதைகள், சிறார் பாடல்கள், சிறார் கதைப்பாடல்கள் எனத் தொடர்ந்து சிறார் இலக்கியத்தில் செயல்பட்டு வருகிறார். இவரது நூல்கள் பல பரிசுகளைப் பெற்றுள்ளன. 'ஆங்கிலம்'. 'படுகா', 'மலாய்', 'ஹிந்தி' ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அமைத்து, பல குழந்தைகளை கதைசொல்லிகளாக, நூலாசிரியர்களாக உருவாக்கி வருகிறார்.லாலிபாப் சிறுவர் உலகம்' என்ற புலனக்குழுவை அமைத்து, பல குழந்தைகளை கதைசொல்லிகளாக நூலாசிரியர்களாக உருவாக்கி வருகிறார்.
Be the first to rate this book.