போர், உள்நாட்டுச் சண்டை, இயற்கைப் பேரிடர்கள், அரசியல் குழப்பம் போன்றவற்றால் சீரழிந்த இருபதாம் நூற்றாண்டின் சீன வரலாற்றை எளிய மொழிநடையின் தந்திரத்தோடு விவரிக்கிறது ஆயுள்.
1937 முதல் 1976ஆம் ஆண்டு வரையிலான சீனாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டங்களில் ஃபூகுயேவும் அவரின் குடும்பமும் தப்பிப் பிழைக்க நடத்திய வலி நிறைந்த போராட்டத்தோடு பயணிக்கிறது இந்நாவல். இதுபோன்றதொரு பரந்த வரலாற்றுப் பின்னணியில் ஒரு எளிய குடும்பத்தின் அன்றாட வாழ்வியலை நுட்பமாக விவரிப்பதில் வெற்றியும் பெறுகிறது.
வன்முறையும் இரத்தமும் ஃபூகுயேவைத் துரத்திக்கொண்டே இருந்தாலும், மனிதம் மட்டுமே அடைக்கலம் என்பதை இந்நாவல் உரக்கப் பேசுகிறது. சர்வபலம் பொருந்திய அரசாங்கத்தின் கொள்கைகள் நாட்டின் கடைக்கோடி சாமானியனை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்னும் கண்ணோட்டத்தால் இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது.
1992இல் வெளிவந்த ஆயுள், சீனாவில் ‘அதிகம் விற்பனையான புத்தகங்களின் பட்டியலி’ல் பத்தாண்டுகளுக்கும் மேலாக இடம்பிடித்திருந்தது. அமெரிக்காவின் ஜேம்ஸ் ஜாய்ஸ் அறநிறுவன விருது, இத்தாலியின் பிரிமியோ க்ரின்ஸானே கவூர் இலக்கிய விருது உள்ளிட்ட பன்னாட்டு இலக்கிய விருதுகளை இந்நாவல் வென்றுள்ளது.
Be the first to rate this book.