அமெரிக்க தேசத்தின் 250 வருட வரலாற்றை, அதன் தலைசிறந்த சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், விஞ்ஞானிகள், அறிவாளிகள், முதலியோரின் சொற்பொழிவுகள், கட்டுரைகள் மற்றும் கவிதைகள் மூலம் எடுத்துக்காட்டும் தொகுப்பு இப்புத்தகம். சுதந்திரம், சமத்துவம், உத்வேகம், இலக்கியம் என்ற நான்கு பிரிவுகளில் அவற்றை வகைப்படுத்தியுள்ளேன். அமெரிக்கா செய்துள்ள சாதனைகள் எளிதில் சாதிக்கப்படவில்லை என்பதை இந்த நான்கு பரிமாணங்களில் அடங்கியுள்ள சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் எடுத்துக்காட்டும்.
'அமெரிக்கா' என்ற தேசம், அதன் அரசியலமைப்பு, அது விடாப்பிடியாக ஆதரிக்கும் முதலாளித்துவம், சுருக்கமாகச் சொன்னால், ‘அமெரிக்கா’ எனப்படும் கருத்தாக்கம் ஒரு பரிசோதனையே; மனிதன் ஒரு சமூகமாகச் சேர்ந்து சிறப்பாக வாழ முடியும் என்பதை நிரூபிக்க முயலும் பிரம்மாண்டமான ஆராய்ச்சிதான் ‘அமெரிக்கா'.
- ச.சுரேஷ்
Be the first to rate this book.