கடந்த நான்கு ஆண்டுகளில் நான் சந்தித்து இரசித்த பல சூழ்நிலைகளில் பல இடங்களில் பல நேரங்களில் தோன்றிய சிறு சிறு கவிதைகளின் தொகுப்பே இந்நூல் ஆகும். மேலும் சில பாடல் வரிகளை கவனித்து இரசிக்கையில் சிந்தனையில் தட்டுப்பட்ட பல கவிதைகள் இதில் அடங்கும். காதலில் தோன்றும் ஆசைகள், காதலின் வலி, பிரிவு, காதலர் வார சிறப்பு கவிகள் என காதலை மட்டும் குறிப்பிடும் கவிகள் அடங்கிய தொகுப்பு இது.
இது எந்தவொரு தனி நபரையும் குறிப்பிட்டு எழுதப்படவில்லை. கற்பனை காட்சிகளே கவிதைகளாகி வடிவம் பெற்று சிறியதோர் நூலாகியிருக்கிறது. காதலை சொல்லவிருப்பவர்கள், காதலிப்பவர்கள் மற்றும் காதல் தோல்வியுற்றவர்கள் அனைவரும் இரசிக்கும் வண்ணம் கவிகள் இருக்கும் என்று நம்புகிறேன். கவிதைகளில் தொடர்ந்து இடம்பெறும் "அவள்" என்னும் சொல். காதலின் பல்வேறு பரிமாணங்களை குறிக்கிறது. என் முதல் நூல் "ஆதிஒலி" என்பதால், இந்தத் தொகுப்பை "ஆதியும் அவளே அந்தமும் அவளே" என்று பெயரிட்டுள்ளேன்.
Be the first to rate this book.