சிக்கலில்லாத மொழி என்றாலும் சிக்கலான உணர்வுகளைப் பற்றிப் பேசுகிறார். இவரின் கவிப்பொருள்களை, 'பெண் மொழி" என்று அடையாளப்படுத்த வேண்டுமா என்ற தயக்கம் ஒவ்வொரு கவிதையை வாசித்து முடித்தப் பின்னும் இருந்தது. அது இவர் கவிதைகளால் எழுந்ததயக்கம் இல்லை. சமூகம் பெண்மொழிக்குக் கொடுக்கும் ஓர இருக்கை குறித்த புரிதல் தான். ஆனால், உண்மையில் பெண்கவிதையின் விடுதலையான மொழியை பாடும் வாய்ப்பை மனுஷி பாரதி எந்த முன்முடிவும் மனத்தடையும் இன்றி முன்வைக்கும்போது, இதைப் 'பெண்மொழி'யின் முதன்மையான மொழி என்று தானே சொல்லியாக வேண்டும்.
Be the first to rate this book.