ஆல்ஸான கேளாகம் என்பது பழங்காலத் தமிழ்க் கணித நூல்களில் ஒன்று. இன்றைய நவீன யுக ஆசிரியர்களும் மாணவர்களும் தொழில்நுட்ப உதவியோடு செய்யும் கணக்குகளை, நம் தமிழர்கள் எவ்வித வசதிகளும் அற்ற காலத்திலேயே மனக் கணக்கின் அடிப்படையிலும் கை விரல்களின் உதவிகொண்டும் திறமையாகச் செய்திருக்கிறார்கள்.
சாதாரண வீட்டுக் கணக்குகள் மட்டுமின்றி, பெரும் வியாபாரம், சங்கக் கணக்கு, நாட்டுக் கணக்கு, படைக் கணக்கு உள்ளிட்ட பலவிதமான கணக்குகளைச் செய்ய அவர்கள் கடைப்பிடித்த கணிதச் சூத்திரங்களை விவரமாகப் பதிவு செய்திருக்கிறது இந்தப் புத்தகம்.
கூட்டல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணக்குகள் அந்தக் காலத்தில் எந்த விதத்தில் செய்யப்பட்டன, அத்தகைய வாய்ப்பாடுகள் என்ன, நம் முன்னோர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதையெல்லாம் இந்தப் புத்தகம் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.
Be the first to rate this book.