ஆளும் வர்க்கம், பாதுகாக்கும் வர்க்கம் தொழில் வாணிபம் முதலிய வர்க்கம் -என்று அரசியலிலே மூன்று முக்கியமான உன்னதமான பிரிவுகளைப் பிரித்துகாட்டி, பிறப்பின் காரணமாக இல்லாமல் சிறப்பின் காரணமாக அந்தந்த வர்க்கத்தில் இடம்பெற எந்த மனிதனுக்கும் உரிமையுண்டு என்பதையும் எடுத்துக் காட்டி அத்தகையன்று பிரிவிற்கும் தேவையான கல்வியை அவர்களுக்கு இளமையில் போதிக்க வேண்டுமென்றும் யார் எந்தப் பிரிவு கல்வியை விரும்புகிறார்கள் என்று பார்த்து அந்தத் துறைக் கல்வியை அவர்கட்கு வழங்க வேண்டுமென்றும் உலகக் கல்வித் திட்டத்திற்குக் கைகாட்டியாக இருந்த பேரறிஞன் பிளேட்டோ எழுதி வைத்திருக்கிறான். ஆனால் ஆச்சாரியாரின் மூளையிலோ ஐம்பது வருட காலமாக ஊறிவந்த திட்டத்தை நிறை வேற்ற இப்போது சமயம் வாய்த்தது என சந்தோஷப்படுகிறார். அவனவன் குலத்தொழிலை அவனவன் செய்ய வேண்டுமென்று திராவிட நாட்டிலே ஒரு கல்வித் திட்டத்தின் மூலம் சொன்னால் அந்தத் திட்டத்திற்கு வர்ணாஸ்ரமத் திட்டம் என்ற பெயரைத் தவிர வேறு பெயர் அளிக்கமுடியாது.
-புத்தகத்திலிருந்து.
Be the first to rate this book.