இன்றய அசர்பைஜான் தலைநகர் பாக்குவில் உள்ள காகேசிய மலையடி வாரத்திலிருந்து கிளம்பி கி.மு.3000 வாக்கில், அய்ரோப்பா மற்றும் ஈரானை ஆக்ரமித்து, அங்கிருந்து இந்தியா விற்குள் படையெடுத்து வந்தவர்கள் தான் ஆரியர்கள். சிந்து சமவெளி நாகரீகம் இயற்கை சீற்றத்தால் அழியவில்லை. ஆரிய படையெடுப்பால்தான் அழிதந்தது என்பதை ஆதாரத்துடன் விளக்கியிருக்கிறேன். எதிர்காலத்தில் கூட தனக்கு எதிராக; இவர்கள் மாறிவிடச் கூடாது என்பதற்காக திட்டமிட்டு இங்குள்ள மண்ணின் மைந்ததர்களுடன் கட்டாய இனக்கலப்பு செய்தனர். இதுத் தொடர்பாக, பல்வேறு இந்திய மாநில மக்களின் DNA மற்றும் RNA பற்றிய, உலகப் புகழ் பெற்ற மரபணு ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகளைக் கொண்டு, இங்கு நடந்த இனக் கலப்பை நிறுவியிருக்கிறேன். இதற்காக, நம்பிக்கைக்குறிய ஆய்வாளர்களின் கட்டுரைகள், உலகப் புகழ்ப்பெற்றப் பல்கலைக் கழக ஆய்வுகள், மரபணு ஆராய்ச்சியாளர்களின் முடிவுகள் என, பல்வேறு ஆதாரங்களின் மூலம், ஆரிய படையெடுப்பையும், பூர்வகுடிகள் சூத்திரர்களாக ஆக்கப்பட்டதையும் ஆவணப்படுத்தியிருக்கிறேன்.
-பெரியார் சரவணன்
Be the first to rate this book.