ஒரு காலம் இருந்தது. ஆரியத்தைக் கேலிக் கூத்தாகக் கருதிய காலம்! இன்றோ,ஆரியரைப் போன்ற புத்தி கூர்மை, ஆசார அனுஷ்டானம், நேம நிஷ்டை பூஜை புனஸ்காரம், நடையுடை பாவனை இருப்பதே. தமிழருக்குச் சீலத்தையும் சிலாக்கியத்தையுந் தரும் என்ற தவறான கருத்துத் தழைத்துக் கிடக்கிறது!
வடநாட்டில் ஆரியர் நிறுவிய எந்த வல்லரசும், விந்தியத்திற்குக் கீழே வந்ததில்லை."வீராதி வீரர்கள்" வாழ்ந்தபோதெல்லாம், திராவிடம் தனி நாடாகவே இருந்தது;தனிச் சிறப்புடனே விளங்கிற்று! கஜினி, கோரி, குட்புடீன், அலாவுதீன், துக்ளக்,பாபர், அக்பர், அவுரங்கசீப், ஆகியோர் காலத்திலும், திராவிடத்தை எந்த வல்லரசும் அடக்கி அழிக்க முடியாது போயிற்று! ஏன்? திராவிடம்,ஆண்டவனின் அவதார புருடர்களை மட்டுமே நம்பிக்கொண்டு வாழ்ந்ததா? அற்புதங்களை, யோகங்களை நம்பிக்கொண்டு வாழ்ந்ததா? இல்லை! இல்லை! வீரத்துடன் இருந்தது.
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.