தமிழ்மகனின் 'ஆறறிவு மரங்கள்' அவருடைய படைப்பாற்றல் வளர்ச்சியை எடுத்து மொழியும் சிறப்போடு வெளி வந்திருக்கிறது. பல நூல்களில் சமீபத்தில் தனது தொய்வையும், தோல்வியையும் சந்தித்த புதுக்கவிதை ஓர் ஆறுதலோடும் நம்பிக்கையோடும் தமிழ்மகனின் வார்த்தைகளின் கையைப் பிடித்துக்கொண்டு உலா போகிறது.
இன்றைய கம்ப்யூட்டரின் மீது தூசுபடிந்திருப்பதைக் காலம் கடந்துபோய்ப் பார்க்கிற தமிழ்மகனுக்கு. பல கவிதைகள் மீது வெற்றிப் பதக்கங்கள் மின்னுவதைப் பார்க்கிற வாய்ப்பும் நிச்சயம் ஏற்பட வேண்டும் என்று ஆவலுறுகிறேன்.
தமிழ்மகன் இன்றைய நடுத்தர வர்க்கம் பாடத்திட்டம் -அரசியல் அந்தி ஊழல் அழுக்குகள் என்பன போன்ற அவசியமான, அவசரமான கவனத்திற்குரிய பொருள்களைக் கவிதைக்குரியனவாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார். சமகால வாழ்க்கைப் பற்றிய விமர்சனமாக. கண்டனமாக இந்த 'ஆறறிவு மரங்கள்' வெளிவந்து - ஒரு குறிக்கோள் நோக்கிய பாங்கில் உரக்கப் பேசுகிறது.
- ஈரோடு தமிழன்பன்
Be the first to rate this book.