புத்தாயிரத்தில் அறிமுகமான சிறுகதைப் போக்கின் நடைமுறையாளர்களில் ஒருவர் கிருஷ்ணமூர்த்தி. எழுத்தில் காட்டும் தேடலும் வகையுணர்த்தும் விதமும் இவரைத் தனித்து நிறுத்துகின்றன. அதற்குச் சான்று இந்தத் தொகுதியிலுள்ள எட்டுக் கதைகள். அன்றாட நிகழ்வில் புலப்படாத அசாதாரணப் புதிரைக் கவனத்துக்குக் கொண்டுவருவதே இவரது புனைவின் நோக்கம். காட்சிக்குள் ஒளிந்திருப்பதைக் காட்டுவதும், காலத்துக்குள் உறைந்திருப்பதை நகரச் செய்வதும், நிகழிடத்தில் மறைந்திருக்கும் உணர்வுப் பிரதேசத்தை இடம்பெயர்த்து உருவாக்குவதும் இவரது கதையாக்க நடவடிக்கைகள். நவீன வாழ்வின் தொன்மை உணர்வையும், தொல்வாழ்வின் புது விசாரணையையும் கதையாக்க முயல்கிறார் கிருஷ்ணமூர்த்தி. முறையே 'அரங்கேற்றம்', 'பாகீரதி' ஆகிய கதைகளை எடுத்துக்காட்டுகளாகக் காணலாம். நவீனத் தமிழில் ஆகப் பெரிய சாதனைகள் நிகழ்ந்த, நிகழும் வடிவம் சிறுகதை என்பது என் நம்பிக்கை. இந்த நம்பிக்கையைக் காலங்காலமாக வலுப்படுத்தியவர்கள் பலர். அந்தப் பலரில் தானும் ஒருவனாக இருக்க விழைகிறார் கிருஷ்ணமூர்த்தி. அந்த விழைவைச் சொல்லும் தொகுப்பு இது.
- சுகுமாரன்
Be the first to rate this book.