குன்றக்குடி அடிகளார் (1925-1995) ஆன்மிகப் புரட்சியாளர்-வருணசாதி எதிர்ப்பாளர். ஆன்மிகத்திலும் சமூகத்திலும் மனிதச் சமநிலை பேணியவர்: கோரியவர். அருச்சனை மொழியாகத் தமிழ், கருவறையில் இடம்பெற வேண்டும். தகுதியுள்ள அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆக வேண்டும் என்று வரிந்து கட்டிச் செயல்பட்டவர். அவருடைய கட்டுரைகளின் தொகுப்பு மிகவும் பயனுள்ளது.
தமிழில் மந்திரங்கள் இருந்தன. இருக்கின்றன என்பதைத் தொல்காப்பியம். திருக்குறள், திருமுறைகண்ட புராணம். திருமந்திரம் முதலிய நூல்கள் விளக்குகின்றன என்று சான்று காட்டுகிறார் அடிகளார்.
தமிழ் மந்திர அருச்சனை கோருவது. தமிழ்த் திருமுறை களுக்கு உரிய இடம் வாங்குவதற்காக இல்லை; வழிபாடும் அருச்சனையும் உரிய பயனைத் தரவேண்டும் என்பதற்காகவே என்கிறார்.
-பெ. மணியரசன்
Be the first to rate this book.