ஆண் குழந்தைகள் தங்கள் உடலை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள, சுகாதாரத்துடன் பேண, கலாசாரம், பண்பாடு என்கிற பெயரில் பொறுப்பற்று இருப்பதைத் தவிர்க்க, எதிர் பாலினத்தை மதித்து நடக்க, தனக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்துக்கும் பயனுள்ள வகையில் வாழப் பழக்க, தன்னை ஒரு நல்ல மனிதனாக வார்த்தெடுக்க, என அவர்களுக்கு நல்வழிகாட்ட வேண்டியுள்ளது. பூடகமாக, நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் அறிந்து கொள்ளும் விஷயங்கள், அவர்களை மேம்பட்ட மனிதர்களாக ஆக்குவதில்லை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டியுள்ளது. பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமூகத்திலுள்ள பெரியோர், வளரும் இளைஞர்களிடம் உடல் பற்றிய அறிவியல் பூர்வமான விஷயங்களை இயல்பாகவும் அக்கறையோடும் உரையாட வேண்டியுள்ளது. அவ்வுரையாடலின் தொடக்கமே இந்த நூல்.
Be the first to rate this book.