இரத்தின. பாலச்சந்தர்
ஆமைக்கும் முயலுக்கும் நடந்த ஓட்டப் பந்தயப் போட்டியில், முயலின் அலட்சியத்தினால் ஆமை வெற்றி பெற்றுவிட்டது என்ற சிறுகதை தமிழிலக்கிய வரலாற்றில் மிகச்சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது. விழிப்புடன், கவனமுடன், அலட்சியமின்றி, சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பதை இக்கதை நன்றாகவே உணர்த்தியுள்ளது.
அன்பு கொண்டு வாழுதல், இரக்கம் கொள்ளுதல்,பிறருக்கு உதவி செய்து மகிழ்தல், நட்பின் சிறப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, இறையருளைப் பெறும் வழிகள் போன்றவைகளை ஆமைகள் மற்றும் முயல்களின் வழியாக எடுத்துக் கூறப்பட்டுள்ளவையே இந்த 'ஆமையும் முயலும்'.
ஆமைகளையும் முயல்களையும் ஒன்றிணைத்து அவைகளின் செயல்பாடுகளையும் மனிதர்களின் செயல்பாடுகளையும் தொடர்புபடுத்தி மனித சமுதாயம் எழுச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூலை இயற்றியிருக்கிறார் ஆசிரியர் ஆர். பாலச்சந்தர். சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் இந்நூல் பயனுள்ளதாக இருக்கும் என்பது உறுதியே.
Be the first to rate this book.