சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் தன்னை நிறுவிய வடகோவை வரதராஜன் தனது முப்பதாண்டுகால உறங்குநிலையைக் கலைத்து, தமிழ் எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்தும் புதியபாணி எழுத்தே இம்மெய்ப் புனைவு, குண்டகசாலை விவசாயக் கல்லூரியின் விவசாயப் பட்டதாரியான வடகோவையார், தனது அரசபணி ஓய்வின் பின்னர், கொரோனா உள்ளடங்கு காலத்தில் மக்களைத் தெம்பூட்டவும் விவசாய முயற்சிகளை முன்னெடுக்கவும் இம்மெய்ப் புனைவுப்பாணி எழுத்துக்கள் ஊடாக முயன்று வெற்றியும் பெற்றிருக்கின்றார். விவசாயத் தகவல்களை வறட்டுத்தனமாக கட்டுரை வடிவில் தராமல் நகைச்சுவைச் சிறுகதை போல் தரும் இப்பாணி வாசகர்களுக்கு புதிய வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது. நூல்முழுக்க விரவிக்கிடக்கும் அங்கதமும் சுயஎள்ளலும் வயிறு குலுங்கச் சிரிக்கவைப்பதோடு, விவசாய, கால்நடை வளர்ப்பு பற்றிய அறிவையும் புகட்டுகிறது.
-ஸப்றி
Be the first to rate this book.