நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் நிகழும் கதை இது.
காலம் மாறுகிறது... காதலர்கள் மாறுகிறார்கள்... ஆனால் காதல் மட்டும் மாறாததாய் என்றும் இளமையோடு நிலைத்திருக்கிறது.
காதலுக்கு சாதி, மதம், இனம், மொழி, நாடு, குலம் எனப் பல இடையூறுகள் ஏற்படலாம். அந்தத் இடையூறுகளோடு பொருளாதார ஏற்றத்தாழ்வும் இணைந்தால், காதலின் பாதை மேலும் கடினமாகிறது.
வாழ்ந்துதான் ஆகவேண்டும் வாழ்க்கையை.
வாழ்க்கைக்கு முதன்மையானது உயிர். ஆனால் சிலருக்கு மானமும், கௌரவமும், செல்வமும் உயிரைவிட உயர்வாகத் தோன்றலாம். அவற்றையெல்லாம் கடந்து, உயிரைவிட உயர்வானது காதல்தான் என்று நம்பும் இரு உள்ளங்களின் பயணத்தையும், அன்றைய காலத்தின் சமூகச் சூழலையும், மனித உணர்வுகளின் ஆழத்தையும் கண்முன் விரியச் செய்யும் ஒரு காதல் கதை.
Be the first to rate this book.