நாம் தற்போது கால்பதித்து நிற்கும் சிங்கப்பூர் நிலம் ஆதியில் எப்படி இருந்தது, இன்றைய நவீனத்தன்மையை அடைய அது எவ்வித மாற்றங்களுக்கு உள்ளானது, காலம்காலமாய் அதில் வசித்த மனிதர்களின் வாழ்க்கைமுறை எத்தகையது, இவற்றிற்கான விடைகளைப் பிம்பங்களாய் மனதில் உருவாக்கத் திறந்துவிட்ட சாளரமே ஆதிநிலத்து மனிதர்கள் என்னும் இந்நூல்.
'முழுவல்' எனும் கவிதைத் தொகுப்பின் மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமானவர். யோகா ஆசிரியரான இவர் கேரளத்தின் கொச்சியில் வசித்து வருகிறார். வர்த்தகப் பட்டப்படிப்பை முடித்த இவர், யோகாவில் ஆய்வியல் நிறைஞருமாவார். இப்போது சட்டம் படித்துக் கொண்டிருக்கிறார்.
பெரியாரிய கருத்துகளால் ஈர்க்கப்பட்ட இவர். பெண்ணியம் சார்ந்த கருத்துகளைத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார். வாசிப்பதன் மூலமும், தான் வாசித்ததை காணொலிகள் வாயிலாகப் பிறருக்குச் சொல்வதன் மூலமும் ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்ச முற்படுகிறார்.
'இந்த வாழ்வின் சமத்துவமற்ற படிநிலைகளைக் காணும்போது மனதுக்குள் இயல்பாகவே எவர் ஒருவருக்கும் வரும் ரௌத்திரமே. இந்தக் கட்டுரைகளை எழுத வைத்தது. கொஞ்சம் சிந்திப்பதால் வாழ்கிறேன் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை' என்கிறார் ஹேமா.
Be the first to rate this book.