நிஜங்கள் பல நேரங்களில் மேடை வெளிச்சத்தைவிடவும் குரூரமானவை. இந்த நாவல், சமூகத்தின் விளிம்புநிலையில் நின்றுகொண்டு, தங்களின் வாழ்வாதாரத்திற்காக ‘ஆடல் பாடல்’ கலைக்குழுக்களில் இயங்கும் எளிய மனிதர்களின் கதையைப் பேசுகிறது.
இருட்டிலும், வறுமையிலும் உழலும் இவர்களின் வாழ்க்கையில், ஒரு சிறு ஒளிக்கீற்றைத் தேடும் முயற்சியே இந்த ‘ஆடலும் பாடலும்’. கலைக்கும் பிழைப்புக்கும் இடையிலான மெல்லிய கோட்டில் நின்று ஆடும் இவர்களின் வாழ்வியல், வாசிப்பவர்களின் மனசாட்சியை ஒரு கணமாவது உலுக்கும் என்று நம்புகிறேன்.
கா.ரபீக் ராஜா. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 1986ஆம் ஆண்டு பிறந்தவர். காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் தனது இளங்கலை வணிகப்பொருளாதாரம் படிப்பை முடித்தார்.
இவரது எழுத்துகள் சொல்வனம். கீற்று, திண்ணை. வாசகசாலை, அந்திமழை, தி இந்து, நோசன்பிரஸ் போன்ற மின்னிதழ்களில் கட்டுரைகளாகவும் கதைகளாகவும் வெளியாகி நல்ல கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளன. தற்கால இலக்கிய சூழலில் இயங்கி வருகிறார்.
காரைக்குடியில் நண்பர்களுடன் இணைந்து சம்பை ஊற்று வாசகர் வட்டம் நடத்தி வருகிறார். தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் இவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் காரைக்குடியில் வசித்து வருகிறார்.
Be the first to rate this book.