'96' திரைப்படம் வெள்ளித்திரையில் கவிதை நீட்டிக் காட்டியது. காதலில் தோய்ந்த ஒரு நெடுங்கவிதை அது இப்புத்தகம் அப்படத்தை வெண்தாளில் கவிதைகளாக வார்த்துத் தந்துள்ளது. வெண்பா எனப்படும் சன்னக் கவிதைகள் இவை. திரைக்கதை ஒன்றைக் கவிதைகளாக எழுதியமையால் இந்த நூல் ஒரு திரைக்கவிதை என்றாகி விடுகிறது.
இது என் எழுதப்பட வேண்டும்? கலைக்குத் தளை இல்லை. கலைஞன் தனக்குப் பிடித்த படைப்பைத் தனக்குத் தெரிந்த வடிவில் மறுஆக்கம் செய்வது மானுட வழமை. நாவல்கள் திரைப்படமாவது மிகப் பிரபல உதாரணம் இங்கே தலைகீழாக்கம் நிகழ்ந்திருக்கிறது திரைப்படம் எழுத்தாகி இருக்கிறது.
இதை என் ஒருவா வாசிக்க வேண்டும்? முதன்மைக் காரணம் இதன் வாசிப்பின்பம். இதன் கூறுமுறையின் செழுமையாலும் மொழியின் எளிமையாலும் வருவது அது அடுத்தது '96' படத்தை இன்னொரு வடிவில் நுகர விரும்புவோருக்கு இது உவப்பாக இருக்கும். இறுதியாக உருவாலும் உள்ளடக்கத்தாலும் இது ஒரு குறுங்காவியமாகச் சொல்லத்தக்கது. சமகாலத்தில் அதிகமில்லை என்ற அளவில் இது முக்கியமாகிறது.
-சி.சரவணகார்த்திகேயன்
Be the first to rate this book.