சரித்திரத்தின் அதிமுக்கியமான கணங்கள், புகழ்பெற்ற பல பேச்சாளர்களின் வார்த்தைகளால் நிரம்பியவை. அவர்களின் உத்வேகமான வார்த்தைகள் உலகத்தின் சில பெரிய நிகழ்வுகளில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கின்றன; அந்நிகழ்வுகளில் போர்கள், அரசியல் கொந்தளிப்புகள், சமாதான பேச்சுவார்த்தைகள், அரசியல் சட்டத்திருத்தங்கள், சில நாடுகளின் சுதந்திரம் ஆகியவையும் அடங்கும். அப்படிப்பட்ட பேச்சாளர்கள் உலக மக்களுக்கு எழுச்சியூட்டினர்; இன்னும் எழுச்சியூட்டிக்கொண்டும் இருக்கிறார்கள்.
எழுச்சியூட்டும் 50 சொற்பொழிவுகள் என்னும் இந்தப் புத்தகத்தில், ஒவ்வோர் உரையுடனும், அந்த உரை நிகழ்ந்த காலகட்டத்து நிகழ்வுகளைப் பற்றிய ஒரு சின்ன அறிமுகமும், உரையைக் கேட்ட மக்களைப்பற்றிய குறிப்பும், உரை ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றிய விவரணையும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஸ்பானிஷ் படைகளை எதிர்கொள்ளத் தயாரான தன் படை வீரர்களுக்கு ராணி எலிசபெத் நல்கிய உரையிலிருந்து பாரக் ஒபாமாவின் பிரியாவிடைச் சொற்பொழிவுவரை. நீங்கள் வாசிக்கவிருக்கும் ஒவ்வோர் உரையும் எழுச்சியூட்டுவது போலவே, அறிவு வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது; நுட்பமான கருத்துகளையும் வழங்குகிறது.
Be the first to rate this book.