ஒருபக்கம் கடந்த இருபது ஆண்டுகளாக உலக சினிமாவைப் பார்க்கும் பார்வையாளனாகவும், மறுபக்கம் திரைப்படம் எடுக்கவிருக்கும் மனதுடையவனாகவும் என இவை என்னுள் இருவேறு துருவங்களாக தங்களின் எல்லையை விரிவுபடுத்திக்கொண்டே இருக்கின்றனர். அவை என்னுள் சுழலும் போக்கை ஒன்றாக்கிட விரும்பியதன் மூலமே இதன் அடிப்படையாக எடுத்துக்கொள்ளலாம். திரைமொழியின் மாற்றத்தை கொண்டு உருவாக்கப்பட்ட கட்டுரைகள் இவை. அதனால் என்னவோ சமூக வரலாறும், திரை நுட்பமும், மெய்யியலும் தானாக வந்து அமர்ந்தது. கட்டுரைகளில் அவை தேவையில்லாத ஒரு வரியையும் பேசி இருக்காது. படங்களின் கதையை அது விஸ்தாரப்படுத்துவதைக் காணமுடியும்.
கலை உனக்கு விருப்பட்ட திசைகளில் திரும்பும் ஆகையால் மகிழாதே, அது உன் எதிரிக்கும் பொருந்தும்.
Be the first to rate this book.