காதலியுங்கள்… காதலியுங்கள்… காதலனோ, காதலியோ சிடைக்காவிட்டாலும் பரவாயில்லை…. காதலை… காதலியுங்கள்…
அவர்கள் கிடைக்கும் முன்பே.. காதலை.. கற்றுத் தேறுங்கள்.. தின்று தீருங்கள்..
அடிக்கடி கவிதை படித்து காதல் உணர்வுக்கு நீர் தெளியுங்கள்
அவ்வப்போது கவி படைத்து காதல் உலகில் பூப்படையுங்கள்
அவர்கள் விட்டுச் சென்றாலும். பரவாயில்லை அனுமதியுங்கள் ஆனாலும் காதலின் கரம் பிடித்து அசைபோடுங்கள்
சாவி இருந்தாலும் பரவாயில்லை மனதின் அத்தனை பூட்டுக்களையும் உடைத்து எறியுங்கள்
மனம் முழுவதும் காதல் பூத்து மணம் வீசட்டும் அதற்கு இந்த நூலும் சிறு உரமாகட்டும்.
Be the first to rate this book.